எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கு அண்ணல் அம்பேத்கர் விருது

தமிழ்நாடு அரசின் 2022ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 
எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை
எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை

தமிழ்நாடு அரசின் 2022ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக தொண்டாற்றிவரும் நபருக்கு தமிழ்நாடு அரசால் கடந்த 1995ஆம் ஆண்டு முதல் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 24 பேர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். 

தொடர்ந்து 2022ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கு சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது. தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான எஸ்.வி.ராஜதுரை மார்க்சியம், அந்நியமாதல், இலங்கைத் தமிழர் சிக்கல், ரஷியப் புரட்சி, இந்து இந்தி இந்தியா, பெரியார்: மரபும், திரிபும், ஆகஸ்ட் 15 துக்கநாள் இன்ப நாள், அயர்லாந்தின் போராட்டம்: தேசியமும் சோசலிசமும், தலித்தியமும், உலக முதலாளித்துவமும், பதி பசு பாகிஸ்தான், ஓர் அணுகுண்டு இரு கவிஞர்கள், இந்து இந்தியா, சொல்லில் நனையும் காலம், மாக்சியம், பெரியாரியம், தேசியம் உள்ளிட்ட எண்ணற்ற நூல்களை எழுதியுள்ளார். மேலும் தமிழ்நாடு அரசியல் பற்றிய நூல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com