பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!

மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியடைத்து தொடங்கி வைத்தார். 
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!


மதுரை: மதுரை மாவட்டம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியடைத்து தொடங்கி வைத்தார். 

பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெற்று வந்தது.

இதில், 28 காளைகளை அடக்கிய ஜெய்ஹிந்த் புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய் என்பவருக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் கார் பரிசு வழங்கப்பட்டது. இந்தப்போட்டியில் 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. 

இந்நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி  புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை தொடங்கியது. 

முதலில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ள மாடுபிடி வீரர்களுக்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். 

இதனைதொடர்ந்து  ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வரும் காளைகள் அடக்கும் பணியில் காளையர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிறந்த மாடுபிடி வீரருக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் காரும், சிறந்த காளைக்கு இரு சக்கர வாகனங்கள் பிரிசாக வழங்கப்படுகிறது. 

மேலும், தங்கம், வெள்ளி காசுகள், அண்டா, சைக்கிள் பீரோ, குளிர்சாதன பெட்டி, டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் என பல பரிசுகள் வழங்கப்பட உள்ளது. 

மொத்தம் 9 சுற்றுகள் நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 வீரர்கள் பங்கேற்பார்கள். 

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 800 காளைகள், 335 மாடுபிடி வீரர்கள் பேங்கேற்றுள்ளனர். 

பாதுகாப்புப் பணியில் 16 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com