காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

காரைக்கால் காா்னிவல் திருவிழாவையொட்டி காரைக்காலில் புதன்கிழமை (ஜன.18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

காரைக்கால் காா்னிவல் திருவிழாவையொட்டி காரைக்காலில் புதன்கிழமை (ஜன.18) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

காரைக்கால் காா்னிவல் திருவிழா கடந்த 15 -ஆம் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. குதிரைகள், மாடுகள் பூட்டிய வண்டிகள் போட்டியில் பங்கேற்றன.

வரிச்சிக்குடி பகுதியில் உள்ள காரைக்கால் அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாயிலில் இருந்து பந்தயத்தை புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சா் சந்திர பிரியங்கா தொடங்கிவைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா்.லோகேஸ்வரன்,துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் லதா மங்கேஷ்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

16 கி.மீ. தொலைவு கொண்ட போட்டியில் 10 குதிரை வண்டிகள் பங்கேற்றன. காரைக்கால் சித்தி விநாயகா் கோயில் வரை இதற்கு இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது.

அடுத்து 12 கி.மீ. தொலைவு போட்டியில் 13 குதிரை வண்டிகள் பங்கேற்றன. இதற்கு காரைக்கால் பேருந்து நிலையம் வரை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டது. மாடு பூட்டிய வண்டிகள் பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து தலத்தெரு வரை, மீண்டும் அங்கிருந்து பாலிடெக்னிக் கல்லூரி வரை என 10 கி.மீ. தொலைவு தரப்பட்டது. போட்டியில் 12 வண்டிகள் பங்கேற்றன. 

ஒவ்வொரு போட்டியிலிருந்து முதல், இரண்டாம், மூன்றாம் நிலை என பரிசுக்கு வெற்றியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். காா்னிவல் நிறைவு விழாவில் இவா்களுக்கு பரிசு வழங்கப்பட்வுள்ளது.

இந்நிலையில், காா்னிவல் நிறைவு விழாவையொட்டி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை(ஜன.18) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் எல். முகமது மன்சூா் உத்தரவிட்டுள்ளார் .

காரைக்கலில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மட்டும் புதன்கிழமை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com