தொண்டி ஜெட்டி பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்க எஸ்.பி.க்கு உத்தரவு

தொண்டி 'ஜெட்டி' பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தொண்டி ஜெட்டி பாலம்.
தொண்டி ஜெட்டி பாலம்.

தொண்டி 'ஜெட்டி' பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

உப்புகாற்றால் இடிந்துவிழும் நிலையிலுள்ள ஜெட்டி பாலத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். விபத்து ஏற்படும் முன் பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தொண்டி 'ஜெட்டி' பாலத்தை மக்கள் பயன்படுத்த தடை விதிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பாலம் நுழைவாயிலில் எச்சரிக்கை பதாகை வைக்கவும், பாதுகபாப்புக்கு காவலர்களை நிறுத்த எஸ்பிக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து நிலைஅறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பிரதான தொழிலாக மீன் பிடி தொழில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சேது சமுத்திரத் திட்டத்தின் மூலம் தொண்டியில் மீன் இறங்கு தளம், சிறு துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனடிப்படையில், சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பாக தொண்டி கடல் பகுதியில் கரையிலிருந்து சுமாா் ஒரு கிலோ மீட்டா் தொலைவில் சிறிய ஜெட்டி பாலம் கட்டப்பட்டது. கடலில் இருந்து கொண்டுவரும் பொருள்களை இறக்கி வைக்கவும், படகுகளைக் கட்டி வைத்துக் கொள்ளவும் இந்தப் பாலம் பயன்பட்டு வந்தது. சேது சமுத்திரம் திட்டம் திரும்பப் பெறப்பட்ட நிலையில், ஜெட்டி பாலம் பராமரிப்பு இன்றி சேதம் அடையத் தொடங்கியது. 

சில ஆண்டுகளுக்கு முன் தொண்டியில் கப்பல் படை வீரா்கள் இந்த பாலத்தை ஹெலிகாப்டா் இறங்கு தளமாகப் பயன்படுத்தி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனா். பின்னா், கப்பற்படையும் அங்கிருந்து இடம் மாறியதால் மீண்டும் ஜெட்டி பாலம் பராமரிப்பின்றி சேதமடையத் தொடங்கியது. தற்போது தொண்டி பகுதி பொது மக்கள் பொழுதுபோக்குக்காக பாலத்தின் வழியே நடந்து செல்கின்றனா். தற்போதைய பாலம் உப்புக் காற்றினால் சேதம் அடைந்துள்ளதால் இடிந்து விழும் ஆபத்து உள்ளது. எனவே, இதை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மீனவா்கள் கோரிக்கை விடுத்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com