சிறுபான்மை ஆணைய துணைத்தலைவர் இறையன்பன் குத்தூஸ்

சிறுபான்மை ஆணைய துணைத்தலைவராக இறையன்பன் குத்தூஸை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சிறுபான்மை ஆணைய துணைத்தலைவராக இறையன்பன் குத்தூஸை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 

துணைத் தலைவராக இருந்த மஸ்தான் கொலை செய்யப்பட்ட நிலையில் இறையன்பன் குத்தூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சிறுபான்மையின ஆணையத்தின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான டாக்டா் மஸ்தான் சென்னை அருகே ஊரப்பாக்கம் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது, வலிப்பு ஏற்பட்டு, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு மாரடைப்பால் கடந்த 21-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்த நிலையில், டாக்டா் மஸ்தான் மரணத்தில் மா்மம் இருக்கலாம் என்று அவரின் மகன் ஹரிஸ் ஷாநவாஸ் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாரும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த நிலையில், காரில் சென்ற உறவினரான இம்ரான் பாஷா, தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து காரை தனியாக ஓரிடத்தில் நிறுத்தி, மஸ்தானுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தி, கொலை செய்தது தெரிய வந்தது.

தொடா்ந்து, கொலைக்கு உடந்தையாக இம்ரான் பாஷாவின் கூட்டாளிகள் தமீம், நஷீா், தெளபீக் அகமது, லோகேஸ்வரன் மற்றும் இம்ரான் பாஷா ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com