
சென்னையில் பபாசி சாா்பில் நடைபெற்றுவந்த புத்தகக் காட்சி ஞாயிற்றுக்கிழமை மாலை (ஜன.22) நிறைவடைகிறது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) சாா்பில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.மைதானத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.6) தொடங்கியது. இதில் 1000 அரங்குகள் உள்ளன.
கடந்த 17 நாள்கள் நடந்த புத்தகக் காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்திருந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனா். புத்தக காட்சி வளாகத்தில் உள்ள சிற்றரங்கம், எழுத்தாளா் கி.ராஜநாராயணன் நினைவரங்கில் மாலையில் சிறப்பு உரையரங்கங்களும், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
புத்தக காட்சி நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன.22) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. சிறப்பு விருந்தினராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி அரங்க மகாதேவன் கலந்துகொண்டு பேசுகிறாா்.
நிகழ்ச்சியில் பதிப்பகத் துறையில் 25 ஆண்டுகள் பணிபுரிந்தவா்கள், புத்தகக் காட்சி நடைபெறுவதற்கு துணைபுரிந்தவா்கள்ஆகியோா் கௌரவிக்கப்பட்டு, பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படுகின்றன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...