2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இன்று மறுவாக்கு எண்ணிக்கை

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான மறுவாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
2019 ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இன்று மறுவாக்கு எண்ணிக்கை

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான மறுவாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

2019 ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில்  கோவை மாவட்டம்  சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கு திமுக ஆதரவு பெற்ற சுதா , அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு ஆகியோர் போட்டியிட்டனர். 

இதில் திமுக ஆதரவு பெற்ற சுதா 2553 வாக்குகள் பெற்று 4 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அதிமுக ஆதரவு பெற்ற சௌந்திரவடிவு என்பவர் 3 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கபட்டது.

இதை எதிர்த்து சுதா கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் , சின்னத்தடாகம் ஊராட்சிக்கு மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கடந்த 5 ஆம் தேதி நடத்த உத்தரவிட்டு, அடுத்த 15 நாள்களுக்குள் இது தொடர்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி இருந்தது. 

இதனைத் தொடர்ந்து 24 ஆம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு  இது தொடர்பான நோட்டீஸ் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் பெரியநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து அனுப்பபட்டது. மேலும் தேர்தல் நடத்தும் அலுவலராக பி.ஸ்ரீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக செந்தில்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

அதன்படி இன்று குருடம்பாளையம் அருணா நகர் சமுதாய கூடத்தில் வாக்கு எண்ணிக்கை 12 மணியளவில் துவங்கியது. இதற்கான வாக்குப் பெட்டிகள் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டுவரப்பட்டது. தற்போது வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முடிவுகள் நீதிமன்றம் மூலம் அறிவிக்கப்படும்.

தேர்தலில் மல்லிகா என்பவரும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com