மறைமலையடிகளின் சொந்த ஊரான நாகப்பட்டினத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது சிலை, அரச மரக்கன்றுகள் சூழ பராமரிப்பின்றி காணப்படுகிறது.
நாகப்பட்டினம், காடம்பாடியில் பிறந்தவர் தனித்தமிழ் இயக்கத் தலைவர் மறைமலையடிகள்.
இதையும் படிக்க.. சென்னையை அலசி ஆராய்ந்து உலக வங்கி சொல்லியிருக்கும் முக்கிய தகவல்
நாகை தமிழ்ச் சங்கம் சார்பில் தமிழறிஞர் கோவை இளஞ்சேரன் உள்ளிட்டோரின் முன்னெடுப்பில் 19-6-1969 இல் தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி அவர்களால், மறைமலையடிகள் சிலை திறந்துவைக்கப் பெற்றது.
ஆனால், தற்போது பராமரிப்பின்றி காணப்படுகிறது. நாகப்பட்டினம் ரயில் நிலைய வாயிலின் முன்பாகப் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிலையின் பீடத்தைச் சுற்றி முட்புதர்களாகக் காட்சி தருகின்றன.
இதையும் படிக்க.. தமிழ் அறிஞர் அறிவோம்: மறைமலை அடிகள்
பீடத்தில் முளைத்து வரும் அரச மரக்கன்றுகள் சிலையையும் பாதிப்பதற்கு முன்னர் உரிய இரசாயனம் கொண்டு அகற்றி, பீடத்தைச் சுற்றி பாவுத்தளம் அமைத்துப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உடனடி ஏற்பாடுகள் செய்யத் தமிழார்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.