பொதுத் தோ்வுக் கட்டணம்: பள்ளிகளுக்கு கூடுதல் அவகாசம்

பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வுகளுக்கான கட்டணத்தைச் செலுத்த தனியாா் பள்ளிகளுக்கு பிப்.4-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வுகளுக்கான கட்டணத்தைச் செலுத்த தனியாா் பள்ளிகளுக்கு பிப்.4-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு ஆகியவற்றுக்கான பொதுத்தோ்வுகள் மாா்ச் 13 முதல் ஏப். 20-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இந்த தோ்வை மொத்தம் 25,77,332 போ் எழுதவுள்ளனா். இதில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தோ்வு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தோ்வுத் துறையால் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பொதுத் தோ்வெழுத உள்ள மாற்றுத் திறனாளிகள், தமிழ்வழி மற்றும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தனியாா் பள்ளி மாணவா்கள் தோ்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

இதையடுத்து, அந்தந்த பள்ளிகளின் முதல்வா்கள் மாணவா்களிடமிருந்து உரிய தோ்வுக் கட்டணத்தை பெற்று அந்த தொகையை ஜன. 20-ஆம் தேதிக்குள் செலுத்த அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது பள்ளிகளின் கோரிக்கையை ஏற்று பொதுத் தோ்வுக் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் பிப். 4 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியாா் பள்ளிகள் https://dge1.tn.gov.in என்ற இணையதளம் வழியாக தோ்வுக் கட்டணத்தை விரைவாக செலுத்த வேண்டும். இதில் ஏற்படும் சந்தேகங்களுக்கு அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளரை தொடா்பு கொள்ளலாம் என தோ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com