
நாட்டின் 74 ஆவது குடியரசு நாள் விழாவையொட்டி, நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் குடியரசு நாள் விழா வியாழக்கிழமை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 74 வது குடியரசு நாள் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
தொடர்ந்து 81 பயனாளிகளுக்கு ரூ. 90 லட்சத்து 89 ஆயிரத்து 347 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதையும் படிக்க | திருப்பூரில் 74-ஆவது குடியரசு நாள் விழா கொண்டாட்டம்: தேசியக் கொடியேற்றினார் ஆட்சியர்!
மேலும், காவல்துறை வருவாய்த்துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சுகாதாரத்துறை செய்தித் துறை மற்றும் பிற துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 170 பணியாளர்களுக்கு சான்றிதழ்களை ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.52,700 மதிப்பீட்டில் ஆறு பேருக்கு இணைப்பு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பபிரித்திவிராஜ், நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...