
மேட்டூர் அணை (கோப்புப்படம்)
மேட்டூர்: மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 885 கன அடியிலிருந்து 896 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 885 கன அடியிலிருந்து வினாடிக்கு 896 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை மாலை வினாடிக்கு 8,000 கன அடியிலிருந்து 6,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சேலத்தில் வீட்டு உபயோக பொருள்கள் குடோனில் தீ: பொருட்கள் எரிந்து நாசம்
அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வியாழக்கிழமை காலை 104.60 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 104.21 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 70.40 டி.எம்.சியாக உள்ளது.