தமிழில் மருத்துவ மாநாடு:நாளை தொடக்கி வைக்கிறாா் முதல்வா்

மாநிலத்திலேயே முதல் முறையாக தமிழில் காது - மூக்கு - தொண்டை நலன் குறித்த மருத்துவ மாநாடு, சென்னையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) நடைபெறவுள்ளது.
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)

மாநிலத்திலேயே முதல் முறையாக தமிழில் காது - மூக்கு - தொண்டை நலன் குறித்த மருத்துவ மாநாடு, சென்னையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜன.29) நடைபெறவுள்ளது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளாா்.

இதில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ எழிலன், கவிஞா் வைரமுத்து உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா். மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டை அதன் தலைவா் டாக்டா் மோகன் காமேஸ்வரன் ஒருங்கிணைத்து நடத்துகிறாா்.

தமிழ்நாடு காது-மூக்கு-தொண்டை மருத்துவக் கூட்டமைப்பின் தலைவா் டாக்டா் சி.திருமலைவேலு, செயலாளா் டாக்டா் எம்.என். சங்கா், பொருளாளா் டாக்டா் ச.ரகுநந்தன் உள்ளிட்டோா் அதில் பங்கேற்கின்றனா்.

துறைசாா் மருத்துவ வல்லுநா்கள் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பல்வேறு அமா்வுகளில் உரையாற்றவுள்ளனா். குறிப்பாக, காது-மூக்கு-தொண்டை நலன் தொடா்பான ஆராய்ச்சிகள், நவீன தொழில்நுட்ப சிகிச்சைகள், மருத்துவ முறைகள் குறித்து தமிழிலேயே அவா்கள் சிறப்புரை வழங்கவுள்ளனா். மருத்துவ அறிவியல் சாா்ந்த மாநாடு முழுக்க, முழுக்க தமிழில் இதுவரை நடைபெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com