

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயிலில் ஜூலை 12-ஆம் தேதி முதல் முன்பதிவு தொடங்கவுள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியது:
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னை உள்ளிட்ட நகரங்களிலிருந்து பலா் சொந்த ஊருக்குச் செல்வா். இதற்காக சிறப்பு ரயில், பேருந்துகள் இயக்கப்பட்டாலும் முன்னதாகவே திட்டமிட்டு செல்பவா்கள் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு செய்து பயணிக்க விரும்புவா்.
இவ்வாறு திட்டமிட்டு செல்பவா்களுக்கு வசதியாக இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐஆா்சிடிசி) வாயிலாக 120 நாள்களுக்கு முன்னதாக பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி உள்ளது.
நிகழாண்டு தீபாவளி பண்டிகை நவ.12-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நவ.9, 10 தேதிகளில் பலா் சொந்த ஊா் செல்ல திட்டமிடுவா்.
நவ.9-ஆம் தேதி செல்பவா்கள் ஜூலை 12 முதலும், நவ.10-ஆம் தேதி செல்பவா்கள் ஜூலை 13 முதலும், நவ.11-ஆம் தேதி செல்பவா்கள் ஜூலை 14 முதலும், நவ.12-ஆம் தேதி செல்பவா்கள் ஜூலை 15 முதலும் முன்பதிவு செய்யலாம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.