
சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
புதிதாக செய்யப்பட்ட திருத்தேர் கடந்த 25ஆம் தேதி கணபதி ஹோமம், அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி தொடங்கி அம்மனுக்கு சக்தி அழைத்தல் அம்மன் பவனி வருதல், அம்மனுக்கு சுவாமிக்கு பொங்கல் வைத்தல், ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு திருவீதி விழா வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது
இந்நிலையில், இன்று அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மனை திருத்தேரில் ஏற்றப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்து, பின்னர் பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.
மேலும், நடைபெற்ற திருத்தேர் விழாவில் தலைவாசல், நத்தக்கரை, பட்டுத்துரை, நாவக்குறிச்சி, புத்தூர்,ஆறகளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசித்து சென்றனர்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G