

நாமக்கல்லில் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் உட்பட 4 பேர் பலியானார்கள்.
நாமக்கல் மாவட்டம், பிலிப்பாக்குட்டையில் இருசக்கர வாகனத்தில் சென்ற அபினேஷ், நிதிஷ்குமார், விக்னேஷ் திடீரென நிலைதடுமாறி கிணற்றில் விழுந்தனர்.
அபினேஷ், நிதிஷ்குமார் மீட்கப்பட்ட நிலையில் விக்னேஷை மீட்க குப்புசாம், அசோக்குமார், சரவணன் ஆகியோர் முயன்றனர்.
அதில் விக்னேஷை மீட்பதற்காக கிணற்றில் குதித்த 3 பேரும் நீரில் மூழ்கி பலியானார்கள். பின்னர் கிணற்றில் மூழ்கிய விக்னேஷ் உடலை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
நாமக்கல்லில் கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் உட்பட 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.