தக்காளி விலை எப்போது குறையும்?

தக்காளி விலை மீண்டும் உயர்ந்துவரும் நிலையில், தக்காளி விலை எப்போது குறையும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 
தக்காளி விலை எப்போது குறையும்?


தக்காளி விலை மீண்டும் உயர்ந்துவரும் நிலையில், தக்காளி விலை எப்போது குறையும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக தக்காளி விலை அதிகரித்து வந்தது. ஒரு கிலோ தக்காளி ரூ. 100-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. எனினும் கடந்த இரு நாள்களாக தக்காளி விலை ரூ. 50 - 80 வரை குறைந்தது.

தற்போது மீண்டும் இன்று (ஜூலை 1) தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு மேல் விற்பனையாகிறது.

திடீர் மழை, விளைச்சல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் தக்காளி இறக்குமதி குறைந்துள்ளது. கோயம்பேடு 1,100 டன் தக்காளி வந்த நிலையில், தற்போது 400 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக 85 லாரிகளில் தினமும் 750 டன் தக்காளி சென்னைக்கு வரும். ஆனால், கடந்த 4 நாட்களாக வெறும் 35 லாரிகளில் மட்டுமே தக்காளி வந்துள்ளது.

இந்நிலையில், தக்காளி விலை எப்போது குறையும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங், 

ஆண்டுமுழுவதும் தக்காளி விநியோகத்தை சீராக்குவதற்கான தீர்வைக் கண்டறிய மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதை எப்படி பாதுகாப்பாக சேமிப்பது உள்ளிட்டவை குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் மாணவர்களிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன. 

அடுத்த 15 நாட்களில் தக்காளி விலை குறைந்துவிடும். அடுத்த ஒரு மாதத்தில் விலை இயல்பை எட்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com