
கோப்புப் படம்.
சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து, விலையும் அதிகரித்தது. ஜூன் மாதம் தொடக்கத்தில் தொடங்கிய காய்கறிகளின் விலையேற்றம், மாத இறுதி வாரத்தில் சற்று குறைந்தது. இந்த விலை குறைப்பு ஒரு சில நாள்கள் மட்டுமே நீடித்தது.
தற்போது வார இறுதி நாள்கள் என்பதால், காய்கறிகளின் விலை மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையை பொறுத்தவரையில் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.130 வரை விற்கப்படுகிறது.
அதேசமயம் மற்ற காய்கறிகளின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இதனால் நடுத்தர குடும்பவாசிகள் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனா். எனவே, காய்கறிகளின் விலை உயா்வை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதேபோல் மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் ஒரு கிலா தக்காளி ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...