தஞ்சாவூர்: கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய அண்ணன் மகன்களை காப்பாற்ற முயன்ற ராணுவ வீரர் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மகிமைபுரம் பூண்டி, புதுத் தெருவை சேர்ந்தவர் ஆரோன் இளையராஜா(38). இவர் 17 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது திருச்சி பட்டாலியன் ஹவில்தாராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.
இரண்டு நாள் விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர், அண்ணன் மகன்கள் மற்றும் மனைவியுடன் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அண்ணன் மகன்கள் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை காப்பாற்ற ராணுவ வீரர் முயன்று உள்ளார். அப்போது அவரும் ஆழமான சேற்று பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளார். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த மீனவர்கள் சிறுவர்களை மீட்டு உள்ளனர். ஆனால் இராணுவ வீரர் ஆழமான பகுதியில் சென்றதால் நீரில் மூழ்கி மாயமானார்.
இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் அவரை தேடும் பணியில் ஈடபட்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அவரை சடலமாக மீட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக பூதலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நாளை ராணுவ மரியாதை உடன் ஆரோன் இளையராஜா உடல் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!

சூறையாடப்பட்ட திரிணமூல் அலுவலகம்! பாஜக தொண்டர்கள் அட்டூழியம்!

2 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடவிருக்கும் மான்செஸ்டர் யுனைடெட்!

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு


