மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக, மத்திய அமைச்சரை சந்தித்து பேசுவதற்காக தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தில்லி புறப்பட்டுச் சென்றார்.
மேக்கேதாட்டு அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவக்குமாா் அறிவித்துள்ளாா். அவரது அறிவிப்புக்கு தமிழக அரசுடன், அரசியல் கட்சிகளும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மத்திய நீா்வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து தமிழகத்தின் எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக துரைமுருகன் இன்று தில்லி புறப்பட்டுச் சென்றார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்துக்கு தேவையான நீரை திறந்துவிட கர்நாடகத்துக்கு அறிவுறுத்தக் கோரி காவேரி மேலாண்மை வாரியத்திடம் கோரிக்கை வைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.