
புதுக்கோட்டை: விராலிமலை அருகே புதன்கிழமை அதிகாலை நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ராஜ்குமார்42), திருச்சியைச் சேர்ந்த கணேஷ்குமார்(34), முரளி (37), சுரேஷ், ரவிக்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் ரெட் டாக்ஸி எனும் வாடகை காரை அமர்த்திக் கொண்டு திருச்சி சென்றுள்ளனர். காரை கணேஷ்குமார் காரை ஓட்டியுள்ளார். இதில் முரளி, ரவிக்குமார் திருச்சியில் உள்ள தனியார் வங்கி அலுவலர்களாக பணி புரிந்து வருகின்றனர்.
இவர்கள் சென்ற கார் விராலிமலை அருகே மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை லஞ்சமேடு அரசமரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவின் பின்புறம் கார் மோதி அதே வேகத்தில் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதையும் படிக்க | மெட்ரோ ரயில் பணி: மெரீனாவில் ஒரு ஆண்டு போக்குவரத்து மாற்றம்
இதில், கார் ஓட்டுநர் கணேஷ்குமார் மற்றும் பயணிகள் சுரேஷ், ராஜ்குமார், ரவிக்குமார் ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதில் முரளி என்பவர் ஆபத்தான நிலையில் கொடும்பாலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விராலிமலை போலீசார் சடலத்தை கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.