மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சென்னை எழிலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ. 2.14 லட்சம் பறிமுதல்

சென்னை எழிலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், ரூ. 2.14 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.

News image
எழிலகம்
Updated On :1 பிப்ரவரி 2024, 7:17 pm

DIN

சென்னை: சென்னை எழிலகத்தில் விடியவிடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், ரூ. 2.14 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.

சேப்பாக்கம் எழிலகம் கட்டடத்தில் நீர்வளத்துறையின் தலைமை அலுவலகம் செயல்படுகிறது. நீர்வளத்துறையின் கீழ் செயல்படும் கடல் தடுப்பு பிரிவும் இங்கு செயல்படுகிறது. இந்த அலுவலகத்தில் உதவி செயற் பொறியாளராக சீ.பாஸ்கரன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த அலுவலகத்தில பணிபுரியும் சிலர் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர், அந்த அலுவலகத்தில் புதன்கிழமை மாலை திடீரென சோதனை செய்தனர். இந்த சோதனை இரவு முழுவதும் நீடித்தது.

சோதனையின் முடிவில் அங்கிருந்து கணக்கில் வராத ரூ.2,14,540 பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பணம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், பாஸ்கரனிடம் விசாரணை செய்தனர்.

பணத்துக்குரிய ஆவணங்கள் வழங்கப்படாமலும், காரணங்கள் சரியாக தெரிவிக்கப்படாமலும் இருந்தால் வழக்குப் பதிவு செய்து  நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.