பள்ளி வளாகத்துக்குள் கழிப்பறையில் பாம்பு கடிதத்தில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி பூவிகா
பள்ளி வளாகத்துக்குள் கழிப்பறையில் பாம்பு கடிதத்தில் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி பூவிகா

பள்ளி கழிப்பறையில் பாம்பு கடித்தது! மருத்துவமனையில் மாணவி அனுமதி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசுப் பள்ளி வளாகத்துக்குள் கழிப்பறைக்குச் சென்ற மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசுப் பள்ளி வளாகத்துக்குள் கழிப்பறைக்குச் சென்ற மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ஒலகாசி அரசு உயர்நிலை பள்ளியில் 200 க்கும் மேற்பட்ட  மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இதனிடையே சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் விடுமுறை கழித்து இன்று திங்கட்கிழமை பள்ளி திறக்கப்பட்ட நிலையில் அதே பள்ளியில் படிக்கும் ஆலாம்பட்டரை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவஞானம் என்பவரது மகள் பூவிகா(12) இன்று காலை பள்ளி வளாகத்துக்குள் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கு பதுங்கி இருந்த பாம்பு பூவிகாவின் காலில் கடித்துள்ளது. இதனால் கதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்த பூவிகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும், இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி வளாகத்துக்குள் கழிப்பறைக்குச் சென்ற மாணவியை பாம்பு கடித்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com