காலை முதல் டாஸ்மாக்; டெட்ரா பேக்-கில் மதுபானம்; அமைச்சர் விளக்கம்

காலையிலேயே மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அமைச்சர் சு. முத்துசாமி கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: காலையிலேயே மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என்று மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளதாக அமைச்சர் சு. முத்துசாமி கூறியுள்ளார்.

40% மதுப்பிரியர்கள் தங்கள் நண்பருடன் சேர்ந்து 180 மி.லி. மதுவை குடிப்பதற்காக காத்திருப்பதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. எனவே தான் 90 மி.லி. அளவில் டெட்ராபேக் வடிவில் மதுபானங்கள் கூடிய விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில் டாஸ்மார்க் மண்டல மேலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. 

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, டாஸ்மார்க் பணியாளர்கள் பிரச்சனை என்ன  என்பது குறித்து விவாதித்தோம் என்றும் டாஸ்மார்க் விற்பனை தொகையை, டாஸ்மார்க் பணியாளர்கள் வங்கிக்கு எடுத்துச் செல்லாமல், வங்கி அதிகாரிகள் பாதுகாப்பு வாகனங்களுடன் வந்து நேரடியாக பணம் பெற்றுக்கொள்ள முடியுமா என ஆய்வு செய்துவருவதாக கூறினார்.

பார் லைசன்ஸ் இல்லாமல்  சட்டவிரோதமாக பார் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும், 500 கடைகள் மூடப்பட்டதால் வருமானம் குறையவில்லை என்றும் அவர்கள் அருகில் உள்ள வேறு டாஸ்மாக் கடைகளுக்கு செல்வதாகவும், கடைகள் மூடப்பட்டதால் மதுப்பிரியர்கள் (கள்ளச்சாராயம்) வேறு தவறான வழிக்கு சென்றுவிடக் கூடாது என்பதை கண்காணிக்க இந்த விவரங்களை சேகரித்து வருவதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார்.

டார்க்கெட் என்பது வருமானத்திற்காக அல்ல மக்கள் வேறு எங்கும் தவறான வழிக்கு செல்கிறார என்பதை ஆய்வு செய்தான் என்றார்.

கண்ணாடி மது பாட்டில்கள் சாலைகளில் போடுவதால் நிறைய பிரச்சனை உள்ளது. இதனால் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் டெட்ரா பாக்கெட் வந்தால் எளிதாகவும் மறு சுழற்சியிலும் அந்த பாக்கெட்கள் பயன்படுத்தலாம் என்றும் விளக்கம் அளித்தார்.

மதுபானத்தில் 180 மி.லி. முழுமையாக ஒருவர் பயன்படுத்த முடியாது  என்பதால் வேறு ஒருவருக்காக,  நண்பருக்காக காத்திருக்கிறார்கள். எனவே 90 மி. லி. டெட்ரா பாக்கெட் கொண்டு வர ஆய்வு நடத்தப்படுகிறது, மிக விரைவில் அது விற்பனைக்கு வரும் என்றும் அமைச்சர் கூறினார்.

சிலர் காலையில் விரைவாக கடைகளை திறக்க கோரிக்கை வைக்கின்றனர். இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது எனவே இதுகுறித்து ஆய்வு செய்யப்படும். நேரம் மாற்றி அமைத்தால் நிறைய பிரச்சனைகள்கள் உள்ளது அரசையும் விமர்சிப்பார்கள் எனவே இதுகுறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. மதுபானத்திற்கு பில் தருவது தொடர்பான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் கம்பியூட்டர் பில்லுடன் மதுபானம் விற்பனை செய்யப்படும், அதனால் முறைகேடுகள் முற்றிலும் தவிர்க்கப்படும் என்றும் அமைச்சர் முத்துசாமி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com