
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடையநல்லூரில் சாலை மறியலில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீஸார் கைது செய்தனர்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணையை திரும்பப் பெற வலியுறுத்தியும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்கின்ற அனைத்து பிரிவு ஒப்பந்த ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே சிஐடியு மாவட்டச் செயலர் மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவர் ராஜசேகரன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் தென்காசி மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரையும் கடையநல்லூர் போலீஸார் கைது செய்தனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...