இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 463 பொறியியல் கல்லூரிகளில் 4,72,972 மாணவர்களும், 861 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 8,51,338 மாணவர்களும் பயனடைந்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் 2022-23-ஆம் ஆண்டு “நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக 1,15,682 இறுதியாண்டு மாணவர்களுக்கு- Simens, Dassault, Microsoft, IBM, Cisco Autodesk, L&T, TCS, Infosys, NSE போன்ற நிறுவனங்கள் மூலமாக AR/VR, Artificial Intelligence, Machine Learning, Full Stack, Data Analytics, Electric Vehicle Design, Cyber Security, Mutual Funds, Capital Markets, Fintech, Block Chain, Digital Marketing மேலும் இது போன்ற 70க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளது.