

ஆடி மாத சோமவார அமாவாசையான இன்று காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், பெண்கள் நாக சிலைக்கு பூஜை செய்து, அரச மரத்தை சுற்றி வந்தனர்.
சோமவார அமாவாசை மிகவும் விசேஷ நாளாக கருதப்படுகிறது. திங்கட்கிழமையில் வரும் அமாவாசையன்று, நாக சிலைக்கு பூஜை செய்து, அரச மரத்தை, சுற்றி வந்தால் கன்னி பெண்களுக்கு திருமணம் கைக் கூடும் என்பது நம்பிக்கை.
மேலும் குழந்தை பேறு பாக்கியம் கிடைப்பதற்கும், நாக தோசம் உள்ளவர்களும் ஆடி மாத சோமவார அமாவாசையான இன்று காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில், அரச மரத்தடியில் உள்ள நாக சிலைகளுக்கு, நுாற்றுக்கணக்கான பக்தர்கள், பெண்கள் பூஜை செய்தனர்.
பூஜை செய்த பின் அரச மரத்தை வலம் வந்து வேண்டுதல் செலுத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.