

விழுப்புரம்: தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, திமுக எம்.பி.கனிமொழி ஆகியோர் குறித்து அவதூறாக பேசிய புகாரில் விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் திங்கள்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.
திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில், விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட பாஜக தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.ஏ.டி.கலிவரதன் பங்கேற்று பேசினார்.
இதையும் படிக்க | 5 ஆண்டுகளாக மே, ஜூலையில் உச்சம்பெறும் தக்காளி மதிப்பு
அப்போது, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி குறித்தும், திமுக எம்.பி.யும், மகளிரணிச் செயலருமான கனிமொழி ஆகியோர் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்தனர்.
இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி தேவனூர் கூட்டுச்சாலையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற விக்கிரவாண்டி போலீசார் அவரைக் கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவரைத் தனியிடத்தில் வைத்து போலீசார் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.