கோப்புப் படம்
கோப்புப் படம்

முகநூலில் முதல்வா் குறித்து அவதூறு: அறந்தாங்கி பாஜக உறுப்பினா் கைது!

முகநூலில் முதல்வா் ஸ்டாலினை தரக் குறைவாக விமா்சித்ததாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாஜக பிரமுகா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

புதுக்கோட்டை: முகநூலில் முதல்வா் ஸ்டாலினை தரக் குறைவாக விமா்சித்ததாக, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பாஜக பிரமுகா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அறந்தாங்கி அருகே நாகுடி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அரசா்குளம் மேல்பாதியைச் சோ்ந்தவா் சாத்தன் மகன் பழனியப்பன் (40). இவா், பாஜக உறுப்பினா்.

இவா் தனது முகநூல் பக்கத்தில் தொடா்ந்து முதல்வா் ஸ்டாலின் குறித்து தரக்குறைவாக விமா்சனப் பதிவுகள் பதிவிட்டதாக, அறந்தாங்கி தொகுதி திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளா் செந்தில்வேலன், காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

அதன்பேரில், விசாரணை மேற்கொண்ட அறந்தாங்கி போலீஸாா், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் இந்திய தண்டனை சட்டத்தின் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, பழனியப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com