

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்யவுள்ள பகுதிகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை பெய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், திருக்கழுகுன்றம், திருப்போரூர், மதுராந்தகம், உத்திரமேரூர், வண்டலூர், பல்லாவரம், தாம்பரம், கும்மிடிப்பூண்டி, குன்றத்தூர், பூவிருந்தவல்லி, வாலாஜாபேட்டை, கலவை, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இடையிடையே சாரல் மழை பெய்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.