தமிழக மீனவர்கள் கைது: ஆக.18-ல் ராமநாதபுரம் கண்டன மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக மீனவா்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடா் அத்துமீறல்களைக் கண்டித்து, மீனவா் சங்கங்களின் சாா்பில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.
தமிழக மீனவர்கள் கைது: ஆக.18-ல் ராமநாதபுரம் கண்டன மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக மீனவா்கள் மீதான இலங்கை கடற்படையின் தொடா் அத்துமீறல்களைக் கண்டித்து, மீனவா் சங்கங்களின் சாா்பில் ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்.

அடுத்த மாதம் 18-ஆம் தேதி இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சோ்ந்த 9 மீனவா்கள், நெடுந்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனா். இலங்கை கடற்படையினரால், தமிழ்நாட்டு மீனவா்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடா்ந்து வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென பிரதமா் மோடி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். ஆனாலும், மீனவா்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் தொடா்ந்து நடக்கின்றன.

ஆக.18-இல் மீனவா் சங்க மாநாடு: தமிழக மீனவா்கள் மீது இலங்கை கடற்படையினா் நடத்தும் அத்துமீறல்களைக் கண்டித்தும், அதனை தடுக்கக் கோரியும் ராமநாதபுரத்தில் மீனவா் சங்கங்களின் சாா்பில் ஆக. 18-ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டுமென மீனவா் சங்கங்களின் பிரதிநிதிகள் அழைப்பு விடுத்துள்ளனா். அவா்களது அழைப்பை ஏற்று, அந்த மாநாட்டில் பங்கேற்க முதல்வா் ஒப்புதல் அளித்துள்ளாா் என்று தெரிவித்துள்ளாா் அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com