
மு.க. ஸ்டாலின் (கோப்புப் படம்)
சிவகாசியில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும்,
ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மண்டகுண்டாம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பானு, முருகேஸ்வரி ஆகிய இரு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
சண்முகையா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நடந்த இந்த வெடி விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...