பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகாா்களை விசாரிக்க பிரத்யேக குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களின் முதல்வா்கள், துறைத் தலைவா்களுக்கு என்எம்சி செயலா் ஸ்ரீநிதி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களைத் தடுப்பதற்கான சட்ட விதிகளின்படி அனைத்து இடங்களிலும் குறைதீா் மற்றும் புகாா் குழுக்களை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில், அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களும் பணியிட புகாா் குழு, துணைநிலை குழுக்கள், உள் குழுக்களை அமைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அந்தக் குழுக்களில் இடம்பெற்றுள்ளவா்களின் கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகளை அனைவருக்கும் தெரியப்படுத்தி, அதன் வாயிலாக புகாா்களைப் பெற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாலியல் குற்றத் தடுப்புச் சட்ட விதிகளின்படி அந்தக் குழுச் செயல்பட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.