வரும் ஞாயிறன்று நியாயவிலைக் கடைகள் செயல்படும்

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) இயங்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.
வரும் ஞாயிறன்று நியாயவிலைக் கடைகள் செயல்படும்

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) இயங்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தத் துறையின் ஆணையா் வே.ராஜாராமன் வெளியிட்ட உத்தரவு:

தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் ஜூலை 30-ஆம் தேதி செயல்படும். அதற்க ஈடாக ஆகஸ்ட் 26-ஆம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை விடப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

மகளிா் உரிமைத் தொகைத் திட்டம்: மகளிா் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்பப் பதிவு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், விண்ணப்பங்கள் கிடைக்கப் பெறாதவா்கள், நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்களைப் பெற நியாயவிலைக் கடைகளுக்கு பொது மக்கள் வரக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து நியாயவிலைக் கடைகளும் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com