அதிர்வு: கொரட்டூரில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஆய்வு

சென்னை, கொரட்டூர் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட அதிர்வால் மக்கள் குடியிருப்பை விட்டு வெளியேறி, சாலையில் விடிய, விடிய தஞ்சம் அடைந்தனர். 
அதிர்வு: கொரட்டூரில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் ஆய்வு
Updated on
1 min read

சென்னை, கொரட்டூர் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் ஏற்பட்ட அதிர்வால் மக்கள் குடியிருப்பை விட்டு வெளியேறி, சாலையில் விடிய, விடிய தஞ்சம் அடைந்தனர்.
 சென்னை, கொரட்டூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்கு மாடி குடியிருப்பு, 25-ஆவது தெருவில் அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு கட்டடப் பணி 2019-ஆம் ஆண்டு ஜனவரியில் முடிவடைந்து, பிப்ரவரி மாதம் விற்பனை செய்யப்பட்டது. 44, 45, 46 என 3 பிளாக்குகளாக அமைக்கப்பட்டு, 9 தளங்களில் 222 குடியிருப்புகள் உள்ளன. இங்கு 1,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
 இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த குடியிருப்பின் 44, 45 ஆகிய பிளாக்குகளில் அதிர்வு ஏற்பட்டு குலுங்கியதாகக் கூறப்படுகிறது.
 மேலும், குடியிருப்புகளில் அலமாரியில் இருந்த பொருள்கள் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விழித்துக் கொண்ட பொதுமக்கள் 600-க்கும் மேற்பட்டோர், அச்சத்தில் குழந்தைகளுடன் குடியிருப்பை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
 தகவல் அறிந்து வந்த வில்லிவாக்கம் தீயணைப்பு வீரர்களும், கொரட்டூர் போலீஸாரும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டு, அங்கிருந்து சென்றனர்.
 எனினும் பொதுமக்கள் குடியிருப்புக்குள் செல்ல பயந்து சாலையிலேயே விடிய விடிய தூங்காமல் விழித்திருந்தனர். பின்னர், சனிக்கிழமை காலை தங்களது குடியிருப்புகளுக்குச் சென்றனர்.
 இந்த நிலையில், வீட்டு வசதி வாரிய தலைமை மேற்பார்வை பொறியாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் சனிக்கிழமை குடியிருப்புகளுக்குள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது குடியிருப்புவாசிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு பல்வேறு குறைகளை பட்டியலிட்டு தெரிவித்தனர்.
 அதைக் கேட்டுக் கொண்ட அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள் கொண்ட குழு அமைத்து, குடியிருப்பு திங்கள்கிழமை
 (ஜூலை 31) ஆய்வு செய்யப்படும். யாரும் அச்சப்படத் தேவையில்லை எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com