ராசிபுரம் அஞ்சல் அலுவலகம் இரவு 8 மணி வரை 12 மணி நேர சேவை தொடக்கம்

சேலம் மேற்கு அஞ்சல் கோட்டம் ராசிபுரம் அஞ்சல் அலுவலகம் வாடிக்கையாளர்கள் நலன் கருதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 12 மணிநேர அனைத்து சேவைகளையும் துவங்கியுள்ளது. 
ராசிபுரம் அஞ்சல் அலுவலகம் இரவு 8 மணி வரை 12 மணி நேர சேவை தொடக்கம்
Published on
Updated on
1 min read

சேலம் மேற்கு அஞ்சல் கோட்டம் ராசிபுரம் அஞ்சல் அலுவலகம் வாடிக்கையாளர்கள் நலன் கருதி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 12 மணிநேர அனைத்து சேவைகளையும் துவங்கியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அஞ்சல் நிலையம் கடிதப் போக்குவரத்து டெலிவரி தவிர சேமிப்பு கணக்கு, தொடர் வைப்புக் கணக்கு, பொது வருங்கால் வைப்பு நிதிக் கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்புக் கணக்கு, அடல் பென்சன் திட்டம், தேசிய சேமிப்பு திட்டம், கிஷான் விகாஸ் பத்திரம், ஆயுள் காப்பீடு சேவை, செல்வ மகள் சேமிப்பு திட்டம், தங்கப்பத்திரம் வெளியீடு, ஆதார் சேவைகள், விரைவுத் தபால், பதிவுத்தபால், விபிபி., விபிஎல், அயல்நாட்டு தபால் சேவை, மணியார்டர் என பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. 

அஞ்சல் அலுவலகம் வழக்கமாக காலை 9.30 மணி முதல் பகல் 2.30 மணிவரை செயல்பட்டு வந்தது. தற்போது காலை  மணி முதல் இரவு 8 மணிவரை 12 மணிநேர சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து திங்கள்கிழமை முதல் (ஜூலை.31) ராசிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இதற்கான சேவையை தொடங்கியது. இன்று காலை 8 மணி முதல் சுழற்சி முறையில் 3 சிப்டுகளாக பணியாளர்களை கொண்டு 12 மணிநேர சேவை வழங்கப்படும் என அஞ்சலக உதவி அஞ்சல் அலுவலர் சி.ஹெலன் செல்வராணி தெரிவித்தார். 

இதற்கென கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இதே போல் ஆதார் சேவை மையமும் விரைவில் 12 மணி நேர சேவையாக மாற்றப்படும். இதனால் அரசுப் பணிக்கு செல்பவர்கள் இதனை பெரிதும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். புதிய சேவை தொடக்க விழாவில் உட்கோட்ட ஆய்வாளர் சரவணன், உதவி அஞ்சல் அலுவலர் நிர்மலா, பிஎல்ஐ வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com