புதுதில்லி: வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.84.50 குறைந்துள்ளது.
சென்னையில், வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ.80.50 குறைந்து, வியாழக்கிழமை முதல் ரூ.1,937-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வாடிக்கையாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு உருளையின் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
அதன்படி, கடந்த இரண்டு மாதங்களாக வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை தொடா்ந்து குறைந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக சென்னையில் வியாழக்கிழமை மீண்டும் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு உருளை ரூ.84.50 குறைந்து, ரூ.1,937-க்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளையின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு உருளை விலை ரூ.118.50 ஆக நீடிக்கிறது.
கடந்த மாதம் வணிகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.171 குறைக்கப்பட்ட நிலையில், இந்த மாதம் ரூ.84.50 குறைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இரண்டாவது மாதமாக சமையல் எரிவாயு உருளையின் விலை குறைக்கப்பட்டுள்ளது உணவு விடுதி, அடுமனை, தேநீா் கடை உள்ளிட்ட தொழில் சாா்ந்தவா்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.