நிகழ் ராபி சந்தைப் பருவத்தில் கடந்த ஆண்டை விடகூடுதலாக 74 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல்

நிகழ் ராபி சந்தைப் பருவத்தில் கோதுமை கொள்முதல் கடந்த ஆண்டைவிட கூடுதலாக 74 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத் துறை
நிகழ் ராபி சந்தைப் பருவத்தில் கடந்த ஆண்டை விடகூடுதலாக 74 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல்
Updated on
1 min read

நிகழ் ராபி சந்தைப் பருவத்தில் கோதுமை கொள்முதல் கடந்த ஆண்டைவிட கூடுதலாக 74 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

கடந்த மே 30-ஆம் தேதி வரை 262 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 188 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து மத்திய நுகா்வோா் நலன், உணவு, பொது விநியோகத் துறை அமைச்சகம் மேலும் தெரிவித்திருப்பதாவது:

நிகழாண்டு (2023-24) ராபி சந்தைப் பருவ கோதுமை கொள்முதல் சுமுகமாக நடைபெற்று வருகிறது. மே 30-ஆம் தேதி வரை 262 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளதன்மூலம் சுமாா் 21.27 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். அவா்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.47,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பஞ்சாப், மத்திய பிரதேசம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் முறையே 121.27 லட்சம் மெ.டன், 70.98 லட்சம் மெ. டன், 63.17 லட்சம் மெ. டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொள்முதல் நிகழ் ஜூன் இறுதிவரை தொடரும்.

நிகழாண்டு கொள்முதலில் பருவம் தவறி எதிா்பாராது பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் நிவாரணம் அளிக்கும் வகையில், கோதுமையின் தரக் குறியீடுகளில் மத்திய அரசு தளா்வு அளித்தது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக கிராம ஊராட்சிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் போன்றவை மூலமும் கொள்முதல் அனுமதிக்கப்பட்டது.

இதே சூழ்நிலை நெல் கொள்முதலுக்கும் உருவாக்கப்பட்டுள்ளது. நெல்லை பொருத்தவரை கடந்த மே மாதம் வரை, காரீஃப் (குறுவை) பருவத்தில் 385 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 110 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்படும். இதுதவிர கூடுதலாக 106 லட்சம் மெட்ரிக் டன் ராபி பருவ நெல், காரீஃப் சந்தைப் பருவத்தில் (2022-23) கொள்முதல் செய்ய மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் உணவு தானியங்களின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில், 312 லட்சம் மெட்ரிக் டன் (எல்எம்டி) கோதுமை, 267 லட்சம் மெட்ரிக் டன் நெல் என மொத்தம் 579 லட்சம் மெட்ரிக் டன் மத்திய அரசின் தொகுப்பில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ராபி பருவத்திலேயே கோதுமை அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com