
சேலம்: சேலம், சா்க்காா் கொல்லப்பட்டி அருகே நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் அறிவித்த நிவாரண நிதியை, சேலம் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் சேலம் வடக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் வழங்கி ஆறுதல் கூறினர்.
சேலம், இரும்பாலையை அடுத்த எஸ்.கொல்லப்பட்டி பகுதியில் பட்டாசுக் கடை நடத்தி வருபவா் கந்தசாமி. இவரது பட்டாசுக் கிடங்கில் கோயில் விழாவுக்காக நாட்டு வெடி பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தப் பணியில் பட்டாசுக் கடை உரிமையாளா் கந்தசாமியின் மகன் சதீஷ்குமாா் உள்ளிட்ட 9 போ் ஈடுபட்டிருந்தனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் பட்டாசுக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில் மூன்று பேர் இறந்தனர். மேலும் 6 பேர் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிக்க | சேலம் அருகே பட்டாசுக் கிடங்கு வெடிவிபத்தில் 2 பேர் கைது; 3 பேர் மீது வழக்குப் பதிவு
வெடி விபத்தில் இறந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் நேரில் வழங்கினர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் இறந்த குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதையும் படிக்க | தமிழ்நாடு அரசில் வேலை வேண்டுமா? - டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
அதன்படி, விபத்தில் இறந்த சதீஷ்குமார், பானுமதி மற்றும் நடேசன் ஆகிய மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ராஜேந்திரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை நேரில் வழங்கினர்.
இதேபோன்று காயமடைந்த ஆறு பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவிக்கான காசோலையை வழங்கி ஆறுதல் கூறினர்.
சேலம் அரசு பொது மருத்துவமனை முதல்வர் மணி மற்றும் கண்காணிப்பாளர் டாக்டர் தனபால் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...