

சென்னை: சென்னையை அடுத்த அம்பத்தூரில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில், ஊதியம் கேட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலை வாங்கிக் கொண்டு, பணிக்காலம் முடிந்ததும் ஊதியம் வழங்கவில்லை என்று கூறி சுமார் 30க்கும் மேற்பட்டோர், ஆவின் பால் பண்ணை நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இதற்கு விளக்கம் அளித்த பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் இவர்கள். எனவே இதில் அதிர்ச்சியடைய ஒன்றுமில்லை என்று பதிலளித்துள்ளார்.
அம்பத்தூரில் உள்ள ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஏன் ஊதியம் வழங்கப்படவில்லை என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.