சென்னையில் பரபரப்பு..! தண்டவாளத்தை விட்டு இறங்கிய ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு நிலவியது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை: சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு நிலவியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் பயணிகளை இறக்கிவிட்டு பணிமனைக்கு சென்றபோது பேசின் பிரிட்ஜ் அருகே ஜனா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள், ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊழியர்களின் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ரயிலின் 2 சக்கரங்களும் நிலைக்கு கொண்டுவரப்பட்டன. 

இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ரயில் ஓட்டுநரின் நடவடிக்கையால் அதிர்ஷ்டவசமாக பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com