சின்னமனூரில் குடிநீர் கோரி மக்கள் சாலை மறியல்!

சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீப்பாலக்கோட்டையில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் மேற்கொண்டனர்.
குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல் மேற்கொண்டுள்ள சீப்பாலக்கோட்டை பொதுமக்கள்
குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல் மேற்கொண்டுள்ள சீப்பாலக்கோட்டை பொதுமக்கள்
Updated on
1 min read


உத்தமபாளையம்: சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சீப்பாலக்கோட்டையில் குடிநீர் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் மேற்கொண்டனர்.

தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை ஊராட்சியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு தேவையான குடிநீரை சீப்பாலக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் வினியோகம் செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் சாலை மறியலால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாள்கள் மேலாக குடிநீர் வினியோகம் செய்யாத நிலையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி சாலை மறியல் மேற்கொண்டனர். இதற்காக ஓடப்பட்டி தேனி நெடுஞ்சாலையில் நடைபெற்ற சாலை மறியலில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சாலை மறியலை கைவிட வலியுறுத்தி சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி மணி மற்றும் ஓடப்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

காலை 8 மணிக்கு தொடங்கி சாலை மறியல் பகல் 11 மணி வரை தொடர்வதால் அப்பகுதியில் சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com