

விருதுநகர் சிறையில் இருந்த 22 கைதிகளை மதுரை சிறைக்கு, போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
விருதுநகர் சிறையில் இரண்டு தரப்பு சேர்ந்த கைதிகளுக்கு இடையே திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு பேர் காயமடைந்தனர். இதையடுத்து சிறையில் இருந்த 22 கைதிகளை மதுரை சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறியது; விருதுநகர் சிறையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்களுக்கு சிறைத்துறை அதிகாரிகள் உதவுவதாகவும், மற்றொரு தரப்பினரை ஒதுக்குவதாகவும் புகார் அளிந்துள்ளது. அதன் பேரில் சிறைத்துறை அதிகாரிகளிடம் ஒரு தரப்பை சேர்ந்த கைதிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இருதரப்பைச் சேர்ந்த கைதிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. மேலும் சிறையில் 250 பேர் மட்டுமே இருக்க வேண்டிய நிலையில், 255 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் குடிநீர் உட்பட அடிப்படை பிரச்னைகள் இருந்ததால் கைதிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் விருதுநகர் சிறையில் இருந்த 22 கைதிகளை மதுரை சிறைக்கு, போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.