

தமிழ்நாட்டின் தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, காலியாக இருந்த தலைமைத் தகவல் ஆணையா் மற்றும் 4 தகவல் ஆணையா்கள் பதவியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபா்களைத் தோ்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அக்பா் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தகவல் ஆணையா்களின் பதவியிடங்களுக்கான பெயர்கள் முடிவு செய்யப்பட்டு ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்து இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், தலைமைத் தகவல் ஆணையராக முன்னாள் டிஜிபி ஷகீல் அக்தரும், தகவல் ஆணையர்களாக முன்னாள் ஏடிஜிபி தாமரை கண்ணன், பிரியா குமார், திருமலைமுத்து, செல்வராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமைத் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பிகார் மாநிலத்தை சேர்ந்த ஷகீல் அக்தர், 1989-ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் ஆரூரில் காவல் துணை கண்காணிப்பாளராக முதல்முதலில் பணியில் சேர்ந்தார்.
மேலும், சென்னை காவல் ஆணையராகவும், சிபிசிஐடி டிஜிபியாகவும் பணிபுரிந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.