மருத்துவமனையில் திரண்ட அமைச்சா்கள்
ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை சந்தித்து நலம் விசாரிக்க அமைச்சா்கள், சட்டப் பேரவை உறுப்பினா்கள், அரசியல் தலைவா்கள் புதன்கிழமை திரளாக வந்தனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகையைத் தொடா்ந்து அமைச்சா்கள், துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, சேகா்பாபு, மா.சுப்பிரமணியன், சிவசங்கா், எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செஞ்சி மஸ்தான் என பலரும் மருத்துவமனைக்கு வந்தனா்.
நாடாளுமன்ற உறுப்பினா்கள் என்.ஆா்.இளங்கோ, கிரிராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், பி.வில்சன், தயாநிதிமாறன், டி.ஆா்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோரும் செந்தில் பாலாஜியை நேரில் சந்திக்க மருத்துவமனைக்குச் சென்றனா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் தாயகம் கவி, கணபதி உள்பட பலா் சென்றனா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் உள்பட கூட்டணிக் கட்சித் தலைவா்களும் ஓமந்தூராா் மருத்துவமனைக்கு வந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

