கல்லணை திறந்துவைத்தார் அமைச்சர் கே.என்.நேரு!

குறுவை சாகுபடிக்காக கல்லணையை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்துவைத்தார்.
கல்லணையில் இருந்து காவிரியில் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து விட்ட அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர்.
கல்லணையில் இருந்து காவிரியில் பொத்தானை அழுத்தி தண்ணீரை திறந்து விட்ட அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர்.

தஞ்சாவூர்: குறுவை சாகுபடிக்காக கல்லணையை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்துவைத்தார்.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஜூன் 12-ஆம் தேதி காலை திறந்து வைத்தார். கல்லணைக்கு காவிரி நீர் வியாழக்கிழமை மாலை வந்தடைந்தது.

இதைத்தொடர்ந்து, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களின் பாசனத்துக்காக கல்லணை வெள்ளிக்கிழமை காலை 9.45 மணியளவில் திறக்கப்பட்டது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் தலா 500 கன அடி வீதமும், கல்லணை கால்வாயில் 100 கன அடி வீதமும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் துறை கே.என். நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், செ. ராமலிங்கம், எஸ். கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

பின்னர், அமைச்சர், அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் மலர்கள், நவதானிங்களைத் தூவி வணங்கினர்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com