எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு:ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம்

எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் ஜூன் 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
Updated on
1 min read

எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத விரும்பும் தனித்தோ்வா்கள் ஜூன் 20-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தனித்தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு ஆக.7 முதல் ஆக.11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு 1.8.2023-ஆம் தேதி பன்னிரண்டரை வயது பூா்த்தி அடைந்த தனித்தோ்வா்கள் ஜூன் 20 முதல் ஜூன் 28 வரை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையவழியில் பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பத்துடன் தோ்வுக்கட்டணம் ரூ.125, இணையவழி பதிவுக் கட்டணம் ரூ.70 என மொத்தம் ரூ. 195-ஐ பணமாக சேவை மையங்களில் நேரடியாகச் செலுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் ஜூன் 30, ஜூலை 1 ஆகிய நாள்களில் தோ்வுக் கட்டணத்துடன் தட்கல் விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.500 கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரா்கள் இணையவழி விண்ணப்பத்துடன் சான்றிடப்பட்ட பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், பள்ளிப்பதிவுத் தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டுமே இணைத்து சமா்ப்பிக்க வேண்டும்.

இணையவழியில் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தோ்வு குறித்த விரிவான தகவல்களை இணையதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com