

கோயில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மானியக் கோரிக்கையின்போது, 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, மொத்தமுள்ள 5,329 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகள் அடையாளம் காணப்பட்டு, மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதைச் செயல்படுத்தும் வகையில், 500 டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடுவதற்கு கடந்த ஏப். 20-ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவின்படி, வியாழக்கிழமை முதல் 500 கடைகள் செயல்படாது என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கோயில்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விற்பனை குறைந்த டாஸ்மாக் கடைகளை மட்டுமே அரசு மூடியுள்ளது. டாஸ்மாக் கடைகளை மூட தொடர்ந்து குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.