பொருளாதாரம் சீராகும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 23 - 29) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.
பொருளாதாரம் சீராகும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்
Updated on
3 min read

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 23 - 29) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

குடும்ப ஒற்றுமைக்கான முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.  வீட்டை புதுப்பிப்பீர்கள்.  புதுத் திட்டங்களில் தொழிலை விரிவுபடுத்துவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவார்கள். வியாபாரிகள் பொருளாதாரத்தைப் பெருக்க முயற்சிப்பார்கள். விவசாயிகளுக்கு எதிர்பாராத உதவிகள் சாதகமாக அமையும். அரசியல்வாதிகள் அரசு வழியில் சாதகமான சூழல் ஏற்படும்.

கலைத்துறையினரின் கனவு நனவாகும். பெண்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவார்கள்.  மாணவர்களுக்கு தன்னம்பிக்கை மிளிரும்.

சந்திராஷ்டமம்  - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

தொழிலை நடத்த கடினமாக உழைப்பீர்கள். கடன்கள் திரும்பக் கிடைக்கத் தாமதமாகும்.  அமைதியாகப் பேசி மரியாதையைத் தக்க வைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள்  அலுவலகத்தில் திறமைகளைச் சரியாக வெளிப்படுத்துவார்கள்.  வியாபாரிகள் வியாபாரத்தைப் பெருக்குவார்கள். விவசாயிகளுக்கு புதிய குத்தகை கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்கும். கலைத்துறையினர் பிறர் எண்ணங்களைப் புரிந்துகொள்வீர்கள்.

பெண்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கூடும். மாணவர்கள் பிடித்த பாடப்பிரிவுகளில் சேர்வார்கள். 
சந்திராஷ்டமம்}இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

முழுத் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சமுதாயத்தில் புகழடைவீர்கள். இல்லத்தில் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். புதிய திட்டங்களை தொழிலில் புகுத்தி உற்பத்தியை அபிவிருத்தி செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிநிமித்தமான சிந்தனைகள் மேலோங்கும். வியாபாரிகள் முதலீடுகளில் கவனம் தேவை. விவசாயிகள் புதிய வெற்றிகளைக் காண்பார்கள்.  

அரசியல்வாதிகளுக்கு வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் நன்கு யோசிக்கவும். விலகிய உறவினர்கள் குடும்பத்துடன் இணைவார்கள்.  பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் குறையும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகக் கடன் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவார்கள். விவசாயிகள் நல்ல பலன்களைக் காண்பார்கள்.

அரசியல்வாதிகள் வித்தியாசமான எண்ணங்கள் மனதில் உதயமாகும். கலைத்துறையினருக்கு பிறரின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு உடல் பிரச்னைகள் தீரும். மாணவர்கள் நண்பர்களுக்கு உதவுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

பொருளாதாரம் சீராகும். உடன்பிறந்தோருடன் இணக்கமாகப் பழகுவீர்கள். எடுத்த காரியங்கள் தடையின்றி நடந்தேறும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் உதவியுடன் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள்.  வியாபாரிகளுக்கு பொருளாதார நெருக்கடி குறையும். விவசாயிகள் சோர்வு நீங்கி, புத்துணர்ச்சியுடன் பணிகளில் ஈடுபடுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கலைத்துறையினர் வெளிநாட்டுப் பயணம் செய்ய நேரிடும்.  மாணவர்கள் போட்டித் தேர்வுக்குத் தயாராவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பழைய வீட்டை நல்ல விலைக்கு விற்பீர்கள். குழந்தைகளின் முன்னேற்றத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள்.  பொருளாதார வளம் மேம்படும்.  சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மதிக்கத்தக்கவராய் வலம் வருவீர்கள். வியாபாரிகள் வாடிக்கையாளர்களைக் கவருவார்கள். விவசாயிகள் புதிய இலக்கை எட்டுவார்கள். அரசியல்வாதிகள் கடினமாக உழைப்பார்கள்.

கலைத்துறையினர் பிறருக்கு உதவுவார்கள். பெண்களுக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

விடாமுயற்சியால் சாதனைகளைச் செய்வீர்கள்.  புதிய எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பீர்கள்.  யோகா கற்பீர்கள். குழந்தைகள் குடும்பப் பெருமையை உயர்த்துவார்கள். வியாபாரிகளுக்கு முதலீடு மேம்படும்.

விவசாயிகள் அநாவசியச் செலவுகளைக் குறைப்பது நல்லது. அரசியல்வாதிகள் சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களால் அனுகூலகமான சூழல் ஏற்படும்.

பெண்களுக்கு குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்களுக்கு சக மாணவர்கள் எதிர்பாராத உதவிகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

தொழிலில் வேகம் கூடும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிறையும்.

உத்தியோகஸ்தர்களின் நம்பிக்கை அலுவலகத்தில் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய சூட்சுமங்களைப் புரிந்து வியாபாரத்தை மேற்கொள்வார்கள். விவசாயிகளுக்கு அரசு மானியம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துவார்கள்.

பெண்கள் உடன்பிறந்தோரை அனுசரித்து நடப்பார்கள். மாணவர்கள் கல்வியில் சாதனைகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம்}இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உணர்ச்சிவசப்பட மாட்டீர்கள். பணத் தட்டுப்பாடு வராது. குடும்பத் தேவைகள் முழுமையாகப் பூர்த்தியாகும்.  

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவார்கள்.  வியாபாரிகள் கூட்டாளிகளுடன் பரிவோடு நடப்பார்கள். விவசாயிகள் கால்நடைகளில் எதிர்பாராத வருவாயைக் காண்பார்கள்.  

அரசியல்வாதிகள் கட்சி தலைமையின் கட்டளைகளை நிறைவேற்றுவார்கள். கலைத்துறையினர் நலிந்தோருக்கு உதவுவார்கள். பெண்கள் புதிய பொருள்களை வாங்குவார்கள்.  மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.  தொழிலில் இருந்த பிரச்னைகள் குறையும்.  வெளியூர் பயணங்களில் பலன் பெறுவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் ரகசியங்களைப் பகிர வேண்டாம்.  வியாபாரிகள் ஒழுங்குமுறையைக் கையாளுவார்கள். விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் புதிய முயற்சிகளை நிறைவேற்றுவார்கள். கலைத்துறையினர் புகழைத் தக்க வைத்துக்கொள்வார்கள்.

பெண்கள் குடும்பத்தில் மருத்துவச் செலவுகளைக் குறையக் காண்பார்கள். மாணவர்கள் தவறாது உடற்பயிற்சிகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 23,24,25.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பேச்சில் நிதானமும் பொறுமையும் தொடரும். புதிய முயற்சிகளில் எச்சரிக்கையுடன் இறங்கவும். குடும்பத்தில் இணக்கமான சூழல் உருவாகும்.  

உத்தியோகஸ்தர்கள் பிறருக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். வியாபாரிகள் வியாபாரத்தை நேர்பார்வையில் நடத்துவார்கள். விவசாயிகளுக்கு கால்நடைகளால் நல்ல லாபம் கிடைக்கும்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரிடம் ஒதுங்கியிருப்பார்கள்.  பெண்கள் தேவைக்கேற்ற வருவாயைப் பெறுவார்கள். மாணவர்கள் நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து பழகுவார்கள்.

சந்திராஷ்டமம்}ஜூன் 26,27.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

கடன் வசூலாகும். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தினருடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். நேரத்தை வீணாக்காமல் உழைப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பக்குவமாக நடப்பீர்கள். வியாபாரிகள் அகலக்கால் வைக்காமல் முதலீடுகளில் ஈடுபடுவார்கள்.  விவசாயிகளுக்கு மகசூல் பெருகும்.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளைச் சிறப்பாக நடத்துவார்கள்.  கலைத்துறையினர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவார்கள். பெண்கள் சுபச் செலவுகளைச் செய்வார்கள். மாணவர்கள் படிப்பைத் தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார்கள்.

சந்திராஷ்டமம்}ஜூன் 28,29.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com