ஒரேநாளில் 2.81 லட்சம் பேர் சென்னை மெட்ரோவில் பயணம்

நடப்பாண்டில் இதுவரை இல்லாத வகையில் ஜூன் 23ஆம் தேதியில் மட்டும் 2.81 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். 
ஒரேநாளில் 2.81 லட்சம் பேர் சென்னை மெட்ரோவில் பயணம்
Updated on
1 min read

நடப்பாண்டில் இதுவரை இல்லாத வகையில் ஜூன் 23ஆம் தேதியில் மட்டும் 2.81 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். 

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது ஒரு நம்பகமாக பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அதன் பயனாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

இது பயணிகளின் நல்வரவேற்பை பெற்றுள்ளதாகவும், பயன்பாடும் அதிகரித்து வருவதையும் காட்டுகிறது.

இந்த நிலையில் கடந்த ஜூன் 23ஆம் தேதி அன்று ஒரே நாளில் மட்டும் அதிகபட்சமாக 2,81,503 பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைத்தில் 23,745 பயணிகளும், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,935 பயணிகளும், கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் 14,938 பயணிகளும் பயணம் செய்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மே மாதம் 24ஆம் தேதி 2.64 லட்சம் பேர் பயணம் செய்ததே அதிகமாக இருந்த நிலையில் ஜூனில் 2.81 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com