செந்தில் பாலாஜி மீது பாஜகவிற்கு தனிப்பட்ட வெறுப்பு கிடையாது: அண்ணாமலை

செந்தில் பாலாஜி மீது பாஜகவிற்கு தனிப்பட்ட வெறுப்பு கிடையாது என்று பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.
Updated on
2 min read

செந்தில் பாலாஜி மீது பாஜகவிற்கு தனிப்பட்ட வெறுப்பு கிடையாது என்று பாஜக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆளுநர் செந்தில்பாலாஜியை டிஸ்மிஸ் செய்து இருந்தார், தமிழக முதல்வர் கடிதம் எழுதிய பின்னர் ஆளுநர் அதை நிறுத்தி வைத்திருப்பவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் அமைச்சர் பதவி நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இருக்கின்றதா என்பதற்குள் செல்ல பா.ஜ.க விரும்பவில்லை. அதே நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் இரண்டு, மூன்று முறை கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தி இருக்கின்றார். 

ஆனால் இப்போது அமைச்சரை நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என சொல்லுகிறார். வழக்கு இருக்கின்ற எல்லா அமைச்சர்களையும் நீக்க ஆளுநர் சொல்ல வில்லை. உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய வழக்கில் அமைச்சர் பதவியை பயன்படுத்துகின்றார் என்பதால் இந்த விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுத்தார். முதல்வர் அமைச்சரவையை சுத்தமாக வைத்துக்கொள்ள வில்லை. முதல்வர் இந்த விவகாரத்தில் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றார். ஆளுநர் எடுக்கும் முடிவுகள் சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ஆளுநர் ஏன் தனது முடிவை திரும்பப் பெற்றார் என்பதை அவரிடம்தான் கேட்க வேண்டும். 

ஆளுநர் நடவடிக்கைகள் அரசியல் அமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். அமைச்சர் செந்தில்பாலாஜி பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏன் முதல்வருக்கு இருக்கின்றது. தமிழகத்தில் 99 சதவீதம் அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கின்றது, பாதி பேர் ஏதோ ஒரு வழக்கில் இருக்கின்றனர். செந்தில் பாலாஜி மீது ஊழல் வழக்கு இருக்கிறது, அவல் அமைச்சர் பதவியை கேடயமாக பயன்படுத்துகின்றார் என்பதால் இந்த நடவடிக்கை ஆளுநரால் எடுக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அதிகாரிகள் அனைவருக்கும் வாழ்த்துகள், இவர்கள் நேர்மையாக இருப்பார்கள் என நம்புவோம், அனைவருக்குமான அதிகாரிகளாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

செந்தில் பாலாஜி மீது பாஜகவிற்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்பு கிடையாது, அவரின் குற்றங்கள் மீதுதான் வெறுப்பு. முதல்வரின் நடவடிக்கைகள் தனிமனிதனை காப்பாற்றும் வகையில் இருக்கின்றது. ஒரு பேச்சுக்காகவே அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுப்போம் என்கின்றனர். செந்தில் பாலாஜியின் தம்பியே தற்போது தலைமறைவாக இருக்கிறார். மாநில அரசு சிதம்பரம் கோவில் விவகாரத்தில் தீட்சிதர்களுக்கு பிரச்னை கொடுக்கக்கூடாது. மீண்டும் பிரச்னை கொடுத்தால் நானே சிதம்பரம் சென்று போராட்டம் நடத்துவேன். மாமன்னன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை, மாரிசெல்வராஜ் நிறைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார் என அறிந்தேன்.

நான் படத்தில் நடிக்கச் செல்வதாக இல்லை, நடிப்பு வராததால் என்னை யாரும் கூப்பிட வில்லை. நடிகர் விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். திரைப்படத்தைப் பார்த்து சிகெரட் பழக்கம் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com